அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராராக பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்
Feb 23, 2017
அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது தோழியான சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சசிகலா விரைவில் முதல்வர் பதவியேற்க உள்ளார் என்ற நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதில், சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்றார்.
சசிகலா சிறைக்கு செல்லும் முன் அவரது உறவினரான டி.டி.வி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷை கட்சியில் சேர்த்தார். பின் டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தார் சசிகலா.
இந்நிலையில் இன்று(23.02.17) கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் முன்னிலையில் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராராக பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்”