சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அந்தத் தருணங்கள்! (கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Aug 4, 2018

Siragu ovvoru nodiyilum

“அது நடந்துவிடுமோ?”
அச்சத்தில் பலர்..
“அது மட்டும் நடக்கக்கூடாது!”
பரிதவிப்பில்-
பதைபதைப்பில் பலர்..
அது நடந்தாலும்
எது நடந்தாலும்
எல்லாவற்றையும்
விமர்சிக்கும் பலர்-
எதிலும் கவனமில்லாது
விமர்சனங்களைக்
கடந்துபோகும் சிலர்-
விமர்சனங்களை உள்வாங்கி
விவகாரமாக்கிக் கொள்வர் பலர்-
எண்ணிய எண்ணியாங்கு
எய்தத் துடிப்பர் சிலர்-

இவ்வாறு பலவாறாய்த்
துளித் துளித் தருணங்களாய்
நதியின் இயக்கம்போல்
ஆச்சரியங்கள் பல உள்ளடக்கி
நகர்ந்துகொண்டே
இருக்கிறது-
வரமாய் வாங்கி வந்த வாழ்க்கை!

தன் முதுகில்
எதுவேண்டுமானாலும்
எழுதிக்கொள்ளுங்கள்
என்று
அகம் புறம் எனத்
தன் அனைத்துப்
பக்கங்களையும்
காட்டிக் கொண்டே
இருக்கின்றன-
வாழ்க்கையின் அடுத்தடுத்த
உணர்வுப்பூர்வமானத்
தருணங்கள் ஒவ்வொன்றும்-

தன்னைப்
படிப்பவர்களுக்காகவும்
தன்னில்
படைப்பவர்களுக்காகவும்-
தன் அருமை
புரிந்தும் புரியாமல்
தங்கத் தருணங்களைத்
தொலைப்பவர்களுக்காகவும்!


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அந்தத் தருணங்கள்! (கவிதை)”

அதிகம் படித்தது