நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கவில்லைOct 25, 2016

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று திமுக நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக திருமாவளவன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

siragu-thirumaavalavan

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராடவேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கருத்து.

ஸ்டாலினும், திருமாவளவனும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆளுங்கட்சி இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாவிட்டாலும் நாங்கள் அக்டோபர் 25ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் அதிமுக, பா.ஜ.க, ம.ந.கூ ஆகிய இந்த மூன்று கட்சிகளும் தாங்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துவிட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்பது ம.ந.கூ-யின் கருத்து. இக்கருத்துக்கு மதிப்பளித்து திருமாவளவன் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்கவில்லை”

அதிகம் படித்தது