ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகிறார்Dec 20, 2016

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப்(70) வெற்றிபெற்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுபவர் மாநிலங்களில் உள்ள தேர்தல் சபையிலும் வெற்றிபெற வேண்டும்.

siragu-donald-trump

எலக்ட்ரோல் என்னும் தேர்தல் சபை உறுப்பினர்கள் இணைந்து அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்வார்கள். இன்று நடைபெற்ற எலக்ட்ரோல் ஓட்டெடுப்பில் குடியரசு கட்சி 276 இடங்களும், ஜனநாயகக் கட்சி 218இடங்களும் கிடைத்தது. இதில் அதிபர் பதவியைப் பெற 270வாக்குகள் வேண்டும். எனவே 276இடங்கள் பெற்ற டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வாகிறார்.

அடித்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி 45 வது அமெரிக்க அதிபரை அமெரிக்க காங்கிரசின் இரு அவை கூட்டத்தில் இது முறைப்படி அறிவிக்கப்படும். ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் பதவியேற்க உள்ளார்கள்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகிறார்”

அதிகம் படித்தது