மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அய்யாக்கண்ணு: விவசாய சங்கங்களை இணைத்து டெல்லியில் மீண்டும் போராட்டம்May 19, 2017

கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் பயிர்கள் கருகி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்களாக போராட்டம் நடைபெற்றது.

Siragu farmers

எனினும் பிரதமர் மோடி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்கவில்லை. தமிழக முதல்வர் பழனிச்சாமி போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தபின் விவசாயிகள் அப்போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்பினர்.

ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றாததால், இந்தியா முழுவதிலும் உள்ள முன்னூறு விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து மீண்டும் டெல்லியில் போராட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசிடம் மாநில அரசு வறட்சி நிவாரணம் கோரிய பிறகு, இதுவரை எந்த நிவாரணமும் கொடுக்கவில்லை. எனவே டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் அல்லது வீர மரணமடைந்துதான் தமிழகம் திரும்புவோம் என்றும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அய்யாக்கண்ணு: விவசாய சங்கங்களை இணைத்து டெல்லியில் மீண்டும் போராட்டம்”

அதிகம் படித்தது