செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அரசாணையை வெளிட்டது தமிழக அரசு: பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுMay 23, 2017

நடப்பாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், பிளஸ் 1 மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

Siragu sengottayan

இதன்படி 10, 11, 12 என மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 600 மதிப்பெண்கள் என குறைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மேலும் சிபிஎஸ்இ-க்கு இணையாக புதிய பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு நேரமும் 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

பதினோராம் வகுப்பில் தேர்ச்சியடவில்லை என்றால் அதற்கு எந்த தடையும் இல்லை, ஜூன், ஜூலை மாதத்தில் தோல்வியுற்ற பாடத்தை எழுதி வெற்றிபெறலாம் என்று கூறியுள்ளார். மேலும் மாலை நேரங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், சனிக்கிழமை தோறும் மூன்று மணி நேரம் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசாணையை வெளிட்டது தமிழக அரசு: பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு”

அதிகம் படித்தது