சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியலே வாழ்க (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 26, 2020

 

siragu ariviyale vaazhga2

அறிவியலே வாழ்க அறிவாராய்ச்சி தொடர்க

அண்டப்  பிண்ட சராசரம் நடுங்கிட

நுண்ணுயிர்க் கிருமி உயிரறுத்து உறுமத்

தூணும் துரும்பும் வாழ் கடவுளும்

துவண்டு கதவடைக்க; அறிவியல் மூளைகளின்

கூட்டு முயற்சி மீட்டெடுக்கிறது இருண்ட

நிலத்தை; ஒளி ஊற்றுகளை உமிழ்கிறது;

மருத்துவக் கரங்களின் சலிப்படையா உழைப்பு

மருவி வந்த உயிரொலிகளை உயிர்ப்பித்தது;

மாளாது துவளாது கண் துஞ்சாது

உயிரை நெஞ்சாங் கூட்டிற்குள் அடைத்திட

உறக்கம் இன்றி ஊக்கமுடன் பயணித்த

உறுதிக்கும், ஆறறிவின் ஏற்றமிகு களிப்பிற்கும்

மண்டியிட்டு மதத்தலைவரும் போற்றட்டும் !


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியலே வாழ்க (கவிதை)”

அதிகம் படித்தது