மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்

தேமொழி

Aug 8, 2020

எதையும் யாரும் எந்தக் காரணமும் இல்லாமல் சொல்லவும் மாட்டார்கள், செய்யவும் மாட்டார்கள். எந்த ஒரு செய்தியும் யாருக்காக, ஏன், எதற்காக உருவாக்கப்படுகிறது? சற்றே சிந்திப்போம். எனது இந்தக் கட்டுரையின் அடிப்படையும் அது போன்ற ஒரு செய்தி பரப்புவதுதான். அது வள்ளுவர் சொன்ன “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்பதை மீண்டும் வலியுறுத்துவது.

வள்ளுவர் சொன்ன வழியில் செல்லாதவர்கள், புத்தர் சொன்னதைப் புரிந்து கொள்ளாதவர்கள், பெரியார் அறிவுரையைப் பெரிது படுத்தாதவர்கள் இந்த செய்தி தரும் கட்டுரையால் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் ஊதும் சங்கை ஊதி வைக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. பொழுது விடியும் போது விடியட்டும்.

அண்மையில் ஒரு சமூக வலைத்தளச் செய்தி கவனத்தைக் கவர்ந்தது. இந்தோனேசியா நாட்டுப் பணத்தாளில் பிள்ளையார் படம் உள்ளதைப் பார்த்து இந்தோனேசியா அமைச்சரை ஒருவர் கேட்டாராம். இஸ்லாமியர் பெரும்பாலோர் வாழும் உங்கள் நாட்டின் பணத்தில் ஏன் இந்துக் கடவுள் பிள்ளையாரின் படம் இருக்கிறது என்று. அதற்கு அந்த இந்தோனேசியா அமைச்சர் சொன்னாராம்.

“நாங்கள் எங்கள் மதத்தைத்தான் மாற்றிக்கொண்டோம், எங்கள் மூதாதையர்களை அல்ல”

“we have changed our religion but not our ancestors”

ஆகா, இந்த உரையாடல் சொல்வது என்ன ஒரு போற்றப்பட வேண்டிய கருத்து என்று தோன்றுகிறதா? இதன் பின்புலத்தில் ஒரு அரசியலே உண்டு என்பதை எவரும் அக்கறை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இது ஒரு திரிப்பு, அதற்கு ஒரு மறைமுக நோக்கமும் உண்டு.

siragu arivai1
Rp20,000 issued on 23 Janaury1998

Source – http://banknoteasia.blogspot.com/2009/02/withdrawal-of-indonesian-banknotes-1998.html

திரிப்பு: இந்த செய்தி உண்மை அல்ல ஒரு மேற்கோள் ஒன்றைத் தனது மனம் போனபடி திரிப்பது.

நோக்கம்: இப்பொழுது இந்த செய்தி பரப்புவதன் நோக்கம் ஆர் எஸ் எஸ் அஜெண்டா – அயோத்தி இராமர் ஆலயம் நிகழ்வின் தொடர்பாக அதை எதிர்க்கும் இஸ்லாமியரை, அல்லது சமயச்சார்பற்றவரைக் கருத்தில் கொண்டு பரப்பப்படுவது.

ஜனவரி 23, 2018 தான் “we have changed our religion but not our ancestors” என்பதன் துவக்கம் என்பதை இணையத் தேடல் காட்டுகிறது.

we have changed our religion but not our ancestors

இதை முதன் முதல் சுஷ்மா சுவராஜ் ஒரு உரையில் குறிப்பிட்டார். அது இந்திய அரசின் தளத்திலேயே உள்ளது. அது இங்கு கொடுக்கப்படுகிறது.
English Translation of External Affairs Minister’s Address during India-ASEAN Youth Awards Event (January 23, 2018)

https://mea.gov.in/Speeches-Statements.htm?dtl/29380
23 JANUARY 2018. Last Updated at 11:37 PM | SOURCE: PTI
Ramayana, Buddhism connect India and ASEAN: Swaraj

siragu arivai2

https://static.toiimg.com/photo/msid-62624739/62624739.jpg?resizemode=4&width=400

[...]
I remember once, when Atal Ji was the Foreign Minister, he went to Indonesia on a visit. There he saw that some people on the roadside were making idols and to him it seemed that the idols were of Hanuman Ji. He says that he got curious and got down from his car and asked them about what they were making? Those people replied that they were making idols of Hanuman Ji. Atal Ji again asked, yours is a Muslim majority country and even you seems to be a Muslim to me? They said, yes sir. So Atal Ji again asked, so why are you making idols of Hanuman Ji to which they replied, sir we have changed our religion but not our ancestors.

Recently I was visiting Indonesia as I had a joint commission meeting there with the Foreign Minister Ratno. All of them expressed there that religion and culture are two separate things. Our religion is Islam but our culture is still that old one. So we are not only linked culturally but we are still connected.
[...]
Note: Swaraj narrated an incident about the Indian influence in Southeast Asia.

இதை எந்த ஒரு இந்தோனேசியா அமைச்சரும் எவரிடமும் சொன்னதாக அதில் குறிப்பில்லை.
வாஜ்பேயிடம் யாரோ தெருவில் ஒரு பொம்மை விற்பவர் கூறியதாக சுஷ்மா அதில் குறிப்பிடுகிறார். அவர் இந்தோனேசியா சென்ற பொழுது அங்கு சமயமும் பண்பாடும் அவர்களைப் பொறுத்தவரையில் வேறு வேறு என்ற கொள்கை உடையவராய் இந்தோனேசியர் இருப்பதாக சுஷ்மா உணர்ந்தும் இருக்கிறார். இதுதான் அவர் சொன்ன செய்தி.

இந்த நிகழ்விற்குப் பிறகு இது முன்னணி ஊடகச் செய்தியாகவும் வந்தது.

சான்றுகள்:

The News Scroll 23 January 2018

https://www.outlookindia.com/newsscroll/ramayana-buddhism-connect-india-and-asean-swaraj/1237142

Ramayana, Buddhism connect India and ASEAN: Swaraj
January 23, 2018

https://www.business-standard.com/article/pti-stories/ramayana-buddhism-connect-india-and-asean-swaraj-118012301631_1.html

Culture, religion, education bind India and ASEAN: Sushma Swaraj

https://5thvoice.news/legalnews_student_youth/OTA3/Culture-religion-education-bind-India-and-ASEAN-Sushma-Swaraj#

25 Jan 2018
——-

இப்பொழுது மக்கள் கற்பனையில் இந்த அனுமார் பிள்ளையார் ஆகிவிட்டார்; செய்தியும் திரிக்கப்படுகிறது. இதன் வழியாக அயோத்தி நடவடிக்கையை எதிர்க்கக் கூடிய இஸ்லாமியருக்கு மறைமுக செய்தி சொல்லப்படுகிறது.

அந்த செய்தி.. எதிர்க்காதீர்கள் இஸ்லாமியரே இராமன் உங்கள் மூதாதையர். உங்கள் நாட்டின் பண்பாட்டை மதியுங்கள்.

மற்றொரு கோணம் பாகிஸ்தானைத் தாக்குவது. இஸ்லாத்துக்கு மாறியவர்களே இராமர் உங்கள் முன்னோர்களில் ஒருவர். இந்தோனேசியாவைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்ற புத்தி புகட்டுகிறார்களாம்.

இப்படித்தான் உண்மையா பொய்யா எனப் புரியாதவாறு வதந்தி உருவாக்குவது. இந்தப் படத்துடன் செய்தி தயாரித்தவர் உண்மையை அறிவார். இந்தப் புனைவு சமூக வலைத்தளங்களில் கீழுள்ளவாறு பரவுகிறது.

A Pakistani politician once asked a Muslim minister of Indonesia why a Muslim majority nation is having Hindu Gods such as Ganesha and Saraswati on its currency notes. The answer can be written in letters of gold: “We have changed our religion but not our ancestors.”

மற்றொன்று

There is an interesting story about it. Somebody asked a senior Muslim Minister of Indonesia as to how a Muslim majority nation is having a Hindu God on its currency. The answer that came can be written in letters of gold “we have changed our religion but not our ancestors “

சான்றுகள்

&

&

https://www.facebook.com/gatik-media-company-129467287763935/

&

https://www.facebook.com/permalink.php?id=2111828272450358&story_fbid=2165487400417778

——-

இதைத் தலைப்பாகக் கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஒன்றும் அயோத்தி இஸ்லாமியர் இராமரை தங்கள் மூதாதையர் என்று கூறி அயோத்தியில் இராமர் கோயிலுக்கு ஆதரவு தருவதாகக் கூறுகிறது (‘We can change religion, not our ancestor Ram’ Oct 27, 2019

https://timesofindia.indiatimes.com/city/varanasi/we-can-change-religion-not-our-ancestor-ram/articleshow/71779814.cms)

இவை போன்ற செய்திகள் யாருக்காக, ஏன், எதற்காக உருவாக்கப்பட்டது என்று புரிகிறதா? தெரிகிறதா?

முன்னோர் பண்பாட்டிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று நல்ல உள்ளங்களே, நீவிர் வாழ்க. ஆனால் உங்களுக்கு ஒரு கோரிக்கை. அத்துடன் பல சமயங்களையும் உள்ளடக்கியது இந்தியப் பண்பாடு என்பதையும் நினைவு கூறுவீர். ஒரு பண்பாட்டுச் சின்னத்தைச் சிதைத்த பின்னர் பண்பாடு எங்கே காக்கப்படுகிறது? எவ்வாறு காக்கப்படுகிறது?


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்”

அதிகம் படித்தது