மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆக்கிரமிப்பின் அடையாளமாய்! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Jan 2, 2021

siragu pudhar1

உலகெங்கும் காணுமிடமெலாம்-நீ

அமைதியின் வடிவமாய்

புத்தபிரானே!

எங்கள் ஊர்களிலோ

உன் சிலைகளை காணும்போதோ

எங்களுக்குள் ஒரு வகை அச்சம்-நீயோ

ஆக்கிரமிப்பின் அடையாளமாய்!

 

அப்பாவிகளைக்கூட கொன்றே

புதைத்தும் எரித்தார்கள்

உயிரோடும்

புதைத்தும் எரித்தார்கள்

இன்றோ

எரிக்கக்கூடாத இறந்த உடலங்களையும்

அவர்தம் மத நம்பிக்கைகளோடு சேர்த்தே

எரிக்கின்றார்கள்…

உன் சித்தாந்தங்களை புதைத்துவிட்டு

அதன் மேல்- உன் சிலைகள்;

ஆக்கிரமிப்பின் அடையாளமாய்!

“மகாவம்ச” புத்திரர்களின்

புதிய பௌத்த சித்தாந்தம்

ஊழித்தாண்டவமாடுது இங்கு-நீயோ

அமைதியாய்

ஆக்கிரமிப்பின் அடையாளமாய்!

 

ஈழன்.

 

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆக்கிரமிப்பின் அடையாளமாய்! (கவிதை)”

அதிகம் படித்தது