ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு உருளையின்(எல்.பி.ஜி) மானியம் ரத்துDec 21, 2016

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெரும் வரி செலுத்துவோர் விபரங்கள் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் அமைச்சகத்திடம் வருமான வரித்துறை விரைவில் அளிக்க உள்ளது.

siragu-gas-cylinders

வருமான வரித்துறை அளிக்கும் விவரங்களில் வரி செலுத்துவோர் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்(பான் எண்) போன்றவை அடங்கும்.

இதற்காக பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் வருமான வரித்துறை இவர்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதும் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு உருளையின்(எல்.பி.ஜி) மானியம் ரத்து செய்யப்படும்.

வருமான வரித்துறை இதுவரை தனிநபர் பற்றிய விவரங்களை காவல்துறை, சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளிடம் மட்டுமே பகிர்ந்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்களுக்கு எரிவாயு உருளையின்(எல்.பி.ஜி) மானியம் ரத்து”

அதிகம் படித்தது