சூன் 16, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

ஆதாரம் கட்டாயமாக்கக்கூடாது வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்விApr 21, 2017

ஆதாரை அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு. ஓய்வூதிய திட்டங்கள், மகாத்மா ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், வங்கிக் கணக்குத் திட்டம், வருங்கால வைப்பு நிதி திட்டம் போன்றவற்றுக்கு ஆதார் அட்டையின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியிருந்தது உச்சநீதிமன்றம்.

Siragu -aadhaar

ஆதாரை கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கின் விசாரணையில் எந்தெந்த திட்டங்களுக்கு ஆதாரை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள நிலையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்ய ஆதாரை கட்டாயமாக்கியது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.

இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இவ்வழக்கை ஏப்ரல் 26 க்கு ஒத்திவைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆதாரம் கட்டாயமாக்கக்கூடாது வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி”

அதிகம் படித்தது