மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-5

ஆச்சாரி

Apr 5, 2014

இந்தத் தொடரில் வரும் சில அத்தியாயங்களுக்கு சிறுதானிய உணவுகள் குறித்து அறிமுகம் தரப்படும்.

சிறுதானிய அடை

தேவையான பொருட்கள்:

சோளம் -2 தேக்கரண்டி

கம்பு – 2 தேக்கரண்டி

கொள்ளு – 2 தேக்கரண்டி

தினை – 2 தேக்கரண்டி

ராகி -2 தேக்கரண்டி

ஓமம் – ½ தேக்கரண்டி

மிளகுத்தூள் – ½ தேக்கரண்டி

சுக்குப் பொடி -½ தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

நறுக்கிய வெங்காயம் – தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்தமல்லி இலை – தேவையான அளவு

நறுக்கிய காய்கறிகள் -தேவையான அளவு

(காரட், பீன்ஸ், காளிஃப்ளவர்,பச்சை பட்டாணி)

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இரவில் ஊறவைத்த சிறுதானியங்களை, அடைமாவு பதத்திற்கு அரைக்க வேண்டும். இதனுடன் எண்ணெய் தவிர, மேலே கொடுக்கப்பட்ட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்க வேண்டும். இதனை தோசைக்கல்லில் சிறிய அடையாக ஊற்றி அதனைச் சுற்றி எண்ணெய் விட்டு மூடி வைக்க வேண்டும். வெந்தவுடன் இதனை சூடாக பரிமாறவும் இதற்கு எந்த சட்னியும் தேவையில்லை.

குதிரைவாலி உப்புமா

தேவையான பொருட்கள்:

குதிரைவாலி – 100 கிராம்

வெங்காயம் (நறுக்கியது)- 1

பச்சைமிளகாய்(நறுக்கியது) -1

இஞ்சி (நறுக்கியது) – 5 கிராம்

கருவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கலந்த காய்கறிகள் (நறுக்கியது) – 1 கோப்பை

(காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி,காளிஃப்ளவர்)

செய்முறை:

குதிரைவாலியை நன்றாக பொரிந்து வரும் வரை நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பை சேர்த்து பொரிந்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, கலந்த காய்கறிகள் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு கோப்பை தானியத்திற்கு 4 கோப்பை என்ற அளவிற்கு தண்ணீரை இதனுடன் சேர்த்துக்கொண்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது வறுத்த குதிரைவாலியை சேர்த்து சிறுஅனலில் வைக்கவேண்டும். அதனை மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். வழக்கமாக நாம் செய்யும் ரவை உப்புமாவை விட இந்த உப்புமா வேக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.

சாமை பொங்கல்

தேவையான பொருட்கள்:

சாமை – 100 கிராம்

பச்சை பயிறு -50 கிராம்

இஞ்சி – 5 கிராம்

பச்சை மிளகாய் -1

உப்பு – தேவையான அளவு

நெய் – 1 தேக்கரண்டி

மிளகு மற்றும் சீரகம் – ½ தேக்கரண்டி

கருவேப்பிலை – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை:

சாமையையும், பச்சை பயிறையும் நன்றாக கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். ஒரு கோப்பை தானியத்திற்கு 4 கோப்பை தண்ணீர்  என்ற அளவிற்கு தண்ணீரை சேர்த்துக்கொள்ளவேண்டும். கடைசியாக இத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். இக்கலவையை அவிப்பானிற்கு (குக்கர்) மாற்றி, நன்றாக பொங்கல் போல வேகவைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி மிளவு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனை மேற்சொன்ன பொங்கலுடன் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

கேழ்வரகு ரொட்டி(கட்லட்)

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) – 1

கேழ்வரகு  மாவு – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் -1 இஞ்சி – 5கிராம்

கருவேப்பிலை – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – தேவையான அளவு

வெங்காயம் (நறுக்கியது) – 1 (தேவையெனில்)

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மென்மையாக கலக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். சிறிய ரொட்டி (கட்லட்) வடிவத்தில் செய்து, தோசைகல்லில் இட்டு முழுவதுமாக வெந்தவுடன் எடுத்துவிடலாம். வேகும் பொழுது சிறிதளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சாப்பிட ருசியாக இருக்கும்.

In doing this, hefce referred explicitly to the need for all research degree programmes it supports to meet minimum standards as set out in the qaa code of practice for postgraduate research programmes best website write essays online

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- பகுதி-5”

அதிகம் படித்தது