மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமராMar 31, 2017

வரும் ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க ஐந்து பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Siragu By-election-in-RK-Nagar

அத்தொகுதியில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து துணை தேர்தல் கமிஷன் உமேஷ் சின்ஹா தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முக்கியமான சாலைகள் மற்றும் 256 ஓட்டுச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

மேலும் இன்று(31.03.17) முதல் இரவு நேர ரோந்து பணிக்கு இரண்டு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர் என்றும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு கேமரா”

அதிகம் படித்தது