செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இணையத்திலும் தமிழால் இணைவோம்

பா. வேல்குமார்

Aug 13, 2016

Siragu-Tamilaal-inaivom4

மாதா, பிதா, கூகுள் என்று கூறுமளவுக்கு இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது, நாமும் இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப நம் திறனை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டு பழமையான மொழி. அம்மொழியை நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சமூக வலைதளத்திலும், மின் அஞ்சல்களை அனுப்பும் போதும் எவ்வாறு தட்டச்சு செய்து பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

இணைய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கூகுளின் ஒரு மென்பொருள் தான் கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ்.

கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை நமது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்த வேண்டும்.

சிலருக்கு தமிழ் தட்டச்சு தெரியும், நமக்கு தமிழில் தட்டச்சு செய்வது எளிதாக வராது என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் ஒரு வரப்பிரசாதமாகும்.

பயன்படுத்துவது எப்படி

கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழ்க்காணும் இணைய முகவரிக்கு செல்லுங்கள்.

https://www.google.com/inputtools/windows/

Siragu Tamilaal inaivom2

கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் இணையப் பக்கத்திற்கு சென்றவுடன் வலது புறம் மேலே தோன்றும் பெட்டி ஒன்று இருக்கும், அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து, பின்பு I Agreeஎன்பதையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அதன்பின்பு பதிவிறக்கம் செய்யுங்கள். பதிவிறக்கம் முடிந்தவுடன் கூகுள் இன்புட் டூல் மென்பொருளை நமது கணினியில் நிறுவ, பதிவிறக்கம் செய்த மென்பொருளை நிறுவுங்கள், பதிவிறக்கம் செய்த மென்பொருளை நமது கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் நமது கணினியில் நிறுவிய பின்பு, கணினியின் ஸ்டார்ட் பட்டன் இருக்கும், டாஸ்க் பாரின் வலது புறம், கீழ்க்காணும் பெட்டி போன்று ஒன்று தோன்றும்.

Siragu Tamilaal inaivom3

இதில் நாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்றால் தமிழ் என்பதை தெரிவு செய்யவும். ஆங்கிலம் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆங்கிலம் என்பதை தெரிவு செய்யவும்.

கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ்ன் சிறப்பம்சங்கள்:

நாம் ஆங்கிலத்தில் அம்மா(Amma) என்று தட்டச்சு செய்யும்போது அது அம்மா என நமக்கு தமிழில் தெரிவு செய்ய ஒரு பெட்டி தோன்றும்,

Siragu Tamilaal inaivom1தோன்றும் பெட்டியில் இருந்து நமக்கு தேவையான வார்த்தைகளை தெரிவு செய்து பயன்படுத்தலாம்.

கூகுள் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பயன்படுத்த MS word பயன்படுத்துங்கள்.

நாம் தங்லிஷில் தட்டச்சு செய்யும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே தமிழில் மாற்றித் தருவது தான் இம் மென்பொருளின் சிறப்பம்சம்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு இம்மென்பொருளை பயன்படுத்த அறிமுகம் செய்து வைப்பதில் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி.


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இணையத்திலும் தமிழால் இணைவோம்”

அதிகம் படித்தது