ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இது தொடக்கமாகவே இருக்கட்டும்! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Jan 28, 2017

Siragu Jallikattu_struggle3

ஏறு தழுவுதல்
தரணியாண்ட தமிழனின்
பண்டைய பாரம்பரிய வீர விளையாட்டு

தமிழும்
கலை, கலாச்சாரம்
பாரம்பரியம், பண்பாடு
எங்கள் உயிர் மூச்சு!

ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்
பீட்டாவோ
வீட்டோவோ

யார் இவர்கள்?
எங்கள் உயிர் மூச்சை
நிறுத்த சொல்ல………

Siragu Jallikattu_struggle1

தமிழனே!
இன்றைய உன் போராட்டம்
தமிழனின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது
வீரத்தமிழனென மீண்டுமொருமுறை
உலகுக்கு உரத்து சொல்கிறது
உலகத்தமிழினமே உன்னை தலை வணங்குகிறது!

இருந்தபோதும்…………
ஆறு சகாப்தங்களாய் தொடரும்
ஈழத்தமினின் போராட்டத்துக்காக
சூடானில்
சோமாலியாவில்
பாலஸ்தீனத்தில்
சிரியாவில்
காஸ்மீரத்தில்
நடந்தேறும் மனித வதைகளுக்காக
அரபு தேசங்களில்
கொடுமைப்படுத்தப்படும் வீட்டுப்பணிப்பெண்களுக்காக
தமிழ் நாட்டிலே
சாதிக்கொடுமைகளுக்காக
பெண் அடிமைத்தனங்களுக்காக
உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அரங்கேறும்
ஊழல்
இலஞ்சம்
பாலியல் வன்கொடுமைகள்
சர்வாதிகார ஆட்சிகள்
ஏகாதிபத்தியங்களின் அடக்குமுறைகள்
அத்துமீறல்களுக்காகவும்
உன்னால்
துணிந்து எழுந்து நின்று
உரக்க குரல் கொடுக்க முடியுமானால்
உரிமைகளுக்காக
விடுதலைக்காக
போராட முடியுமானால்…………………………..

தமிழனே!
உன்னை இந்த வையகமே
காலில் வீழ்ந்து வணங்குமே!

இது தொடக்கமாகவே இருக்கட்டும்……………………
-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இது தொடக்கமாகவே இருக்கட்டும்! (கவிதை)”

அதிகம் படித்தது