மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய வானிலை ஆய்வு மையம்: அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புJan 4, 2017

இந்த வருடத்திற்கான பருவமழை தாமதமாக ஆரம்பித்ததாலும், பனிப்பொழிவு காரணமாகவும் குறைந்த அளவே மழை பெய்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

siragu-rain

பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய வானிலை ஆய்வு மையம்: அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு”

அதிகம் படித்தது