ஜூலை 11, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தி எதிர்ப்பு! (கவிதை)

இல. பிரகாசம்

Jun 17, 2017

Siragu hindhi5

திரண்டெழுந்த தோள்களுண்டு அடுதோள்

                திறம்முடைத்த வீரர்படை யுண்டு

தாய்நாட்டுக் கொருதீமை வருமால்

                தன்னுயிரீந் தின்புறும்வீ ரருண்டு

வரும்பகைக்கட னழிக்காது எனதுடல்

                வீழாதென என்தாய்மீ தாணை!;

தாய்நாட்டிற் கெனதுயிர்வீ ழாதெனின்

                ஈன்றதாய்தன் மகவெண்ணி புகழ்வளோ?

நரிக்குணந்தரித் தலையும்கொடு விலங்கு

                நம்மீது பாய்வதோ? மொழியால்

தனித்தநனி நாகரீக மக்கள்

                நம்மீதா ரியம்தொடுத்த போரிது!

செழித்தோடும் சிந்துநதி முதலாய்

                சீராளும் புகழ்கொள்ளும் காவிரிக்

கரைகடந்து வாழுந்தமிழ் மொழிமீ (து)

                கீழ்க்குணமுடை யோர்தொடுத்த போரிது!

எதிர்நின்று களம்கண்டு தாக்கும்

                போரன்று! மொழியால்பிற வற்றால்

கருவிகொண்டு பின்சென்று தாக்கும்

                பகைவர்வரும் பண்பாட்டு போரிது!

ஆண்மைய ரேனும்உளர் எனின்

                ஆரியம்செய் போரினைவீழ்த் திடவே

ஆர்த்தெழுந்து வீரர்காள் வாரீர்

                அடுதோள்வலி வீரர்காள் வாரீர்

விரிந்தமார்பு கமழ்ந்திடவே மாற்றார்

                வருகின்றார்! கயமையே உருவாய்

விளைந்தநம் பகைவர்படை கொண்ட

                வஞ்சினம்வீழ பெருவெற்றி கொள்க!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தி எதிர்ப்பு! (கவிதை)”

அதிகம் படித்தது