சூலை 2, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இந்த உலகம் உன்னுடையது! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Jan 9, 2021

sirau maanudam1

 

அடுத்ததொரு ஆண்டும்

கடந்துபோகிறது

நீ எதைத்தான் சாதித்திருக்கிறாய்?

உன் குடும்பத்தாருக்கு

நீ சார்ந்த சமூகத்துக்கு

உன்னை தாங்கியிருக்கும் இப்பூமிக்கு

என்னை நானே கேட்டிருக்கும் கேள்வி…

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும்

முட்களாய் நிறைந்த சவால்கள், சோதனைகள்

முடிவில்லாமல் தொடரும் தோல்விகள்

ஓர் முடிவில் ஆரம்பமாகும்

சங்கிலித்தொடராய் பிரச்சினைகள்

வாழ்வை முடித்துவிட தூண்டும் அவமானங்கள்-

எத்தனை எத்தனை இடர்கள் வரினும்;

தாங்கும் வல்லமை

எதிர்கொள்ளும் துணிவு

வெற்றிகொள்ளும் உறுதி

தந்தாயே சக்தியே!

நன்றிகள் கோடி கோடி!

உன் இலட்சியங்களே

உன் உயிர் மூச்சு

எட்டிப்பிடித்திட ஓடு

ஓடிக்கொண்டேயிரு

உன் உயிர் ஓயுமுன்னே…

இந்த உலகம் உன்னுடையது!

வரப்போகும் புதிய நாட்களை

உன்வசமாக்கு!

 

ஈழன்.


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்த உலகம் உன்னுடையது! (கவிதை)”

அதிகம் படித்தது