ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

இன்று பன்னீர் செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூடுகிறதுOct 24, 2016

இன்று நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூடுகிறது.

siragu-panneer-selvam

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா சென்ற மாதம் 22 ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக ஜெயலலிதாவின் துறைகளை நிதியமைச்சர் கவனித்துக்கொள்வார் என்றும், அவர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கலாம் என்றும் பொறுப்பு ஆளுநர் உத்தரவிட்டார்.

அக்டோபர் 19ந்தேதியில் பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில் உள்ளாட்சிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமித்தல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேலும் இன்று இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிய வருகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்று பன்னீர் செல்வம் தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூடுகிறது”

அதிகம் படித்தது