அக்டோபர் 12, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் அணி கூடுதல் ஆவணம் தாக்கல்May 12, 2017

அதிமுக-வில் பிளவு ஏற்பட்டதால் இரண்டு அணிகளாகப் பிரிந்தது. இந்த இரு அணிகளும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்காக போட்டியிட்டு வருகிறது. தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்று இரு தரப்புகளும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை தாக்கல் செய்தன.

Siragu admk

ஓ.பி.எஸ். அணி சார்பாக இருபதாயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக அந்த ஆவணத்தில் தெரிவித்து இருந்தனர்.

அச்சமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்ததால், இந்த ஆவணங்களை சரிபார்க்க நேரமில்லாமால் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இந்நிலையில் இன்று(12.05.17) ஓ.பி.எஸ் அணி மேலும் 12,600 பக்க ஆவணங்களை கூடுதலாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் அணி கூடுதல் ஆவணம் தாக்கல்”

அதிகம் படித்தது