செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இருமலை குணப்படுத்த குறிப்புகள்

சிறகு சிறப்பு நிருபர்

Aug 15, 2015

irumal1

 

 • சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும்.

 • மிளகை தூள் செய்து, சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட, சூட்டினால் உண்டாகும் இருமல் குணமாகும்.

 • விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இருமல் குணமாகும்.

 • எலுமிச்சம் பழச்சாற்றுடன்தேனை கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.

 • இரவு வேளையில் மிளகு, மஞ்சள் கலந்த பாலை அருந்தி வந்தால் சளியும் இருமலும் பறந்தோடி விடும்.இதனை குறைந்தது ஒரு வாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

 • மாதுளம் பழத்துடன் பாதாம் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும்.

 • துளசிப்பூ, திப்பிலி, வசம்புப் பொடி இவைகளில் சர்க்கரை மற்றும் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர  இருமல் குறையும்.

 • பாலுடன் கிராம்புப் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும்.

 • தேனுடன் அதே அளவு இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில்இருந்து நிவாரணம் கிடைக்கும்.

 • தேனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

 • சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.

 • நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இருமலை குணப்படுத்த குறிப்புகள்”

அதிகம் படித்தது