மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை: தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டதுDec 30, 2016

தமிழக மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதாகக் கூறி படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை அரசு கைப்பற்றியுள்ளது. இதுவரை 122 இழுவைப்படகுகளும், 140 நாட்டுப் படகுகளும் கைப்பற்றப்பட்டது.

siragu-tamil-fisherman

கைப்பற்றப்பட்ட படகுகளையும், உபகரணங்களையும் திருப்பித்தரப்போவதில்லை என கடல் தொழிலியல் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா கூறியுள்ளார். மேலும் கைப்பற்றப்பட்ட படகுகளும், உபகரணங்களும் அரசுடைமயாக்கப்பட்டுவிட்டது என்றும், எனவே இவைகளை விடுவிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் படகுகளை தடுப்பதன் மூலம் 50 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை: தமிழக மீனவர்களின் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டது”

அதிகம் படித்தது