சூலை 31, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

இலஞ்சம் (கவிதை)

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

Oct 6, 2018

Siragu corporate5

 

எங்கு பிறக்கிறது

இந்த இலஞ்சம்

பிறந்த குழந்தைக்கு

கையில் பணம்

“நல்ல புடிமானம்

பெற்றோருக்கு சொத்து சேர்ப்பான்”

கோயில் உண்டியலில்

கடவுளுக்கு காணிக்கை

“நினைத்த காரியம் நிறைவேறும்”

 

திருமண விழாவில்

மொய் என்ற அன்பளிப்பு

“உறவினர்கள் மதிக்க வேண்டாமா?”

 

பள்ளியில் சேர்க்க

முன்பணம்

“நிர்வாகக் கட்டிட மேன்மைக்கு”

 

அரசாங்கத்திற்கும்

அரசுக்கும் கொடுக்கப்படும்

பெயர் இலஞ்சம்

 

ஓ! அதுதான் இயற்கைப்

படைப்பின் மாற்றமா?

 

பெய்யும்  போது

சுத்தமான மழைநீர்

ஒழுகும் போது அருவி

ஓடும் போது ஆறு

நிற்கும்போது குளம்

 

கடலில் கலக்கும் போது

உப்பு கலந்த நீர்

அனைத்தும் நீர்தான் ஏன்

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர்

சுத்தமாக பிறக்கும் மழைநீர்

உப்பான கடல்நீரில் மடிவது போல

 

லஞ்சம் பிறக்கும் இடத்தைப்

பிரிக்க வேண்டுமோ? – இல்லை

 

வளரும் இடத்தை

செதுக்க வேண்டுமா – இல்லை

கலக்கும் இடத்தை

மாற்ற வேண்டுமா?

எப்படியோ?

கடலுக்கு எல்லையில்லை

லஞ்சத்திற்கு அளவில்லை

அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு

கணக்குமில்லை

லஞ்சம் கொடுப்பவர்களின்

கைகளுக்கு ஓய்வுமில்லை

வாங்குபவர்கள் என்றும்

சலிப்பதுமில்லை

 


நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலஞ்சம் (கவிதை)”

அதிகம் படித்தது