மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இளந்தமிழர் படையே வருக!(கவிதை)

இல. பிரகாசம்

Jan 21, 2017

Siragu-tamilan

இளந்தமிழர் படையே வருக!-தமிழர்

இனமெனும் உணர்வுடனே வருக! வருக!

பண்டுதமிழ் நாட்டுப் பெருமைதனை காக்க

படைதிரண்டு அணியாய் வருக!வருக!

சமர்க்களம் நோக்கி வருக!-புதுச்

சரித்திரம் படைக்க வருக! வருக!

எட்டுத்திசை யெங்கும்புகழ்த் தமிழ்க்கொடி பறக்க

ஏறுநடையிட்டே தமிழ்வீரர் யாவரும் வருக!

செந்தமிழ்நாட்டுச் சீராளுந் தமிழரினமே வருக!

சீர்பெற்று உயர்வுடன் வாழ வருக!

வரும்நாளைய தமிழுகம் சிறந்து விளங்கிட

வன்தோள் தமிழ்வீரர்படை வருக!வருக!

கொடுந்தீய பகைமைதனை வெல்ல நெஞ்சில்

கனல்தீ யேந்தியே வருக!வருக!

தமிழின மீட்சியொன்றே நம்இலக்கெனக் கொண்டு

தீரத்துடன் போரிட வீரர்களே வருக!

நாளைய தமிழுழகம் நிலைபெற்று வாழ்ந்திட

நல்வீர நெஞ்சினரே வருக!வருக!

போர்களம் பாடிமகிழ இளந்தமிழ் வீரர்ப்

படைதிரண்டு அணியாய் வருக! வருக!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இளந்தமிழர் படையே வருக!(கவிதை)”

அதிகம் படித்தது