ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

இளம் தமிழர் படையே வருக வருக!(கவிதை)

இல. பிரகாசம்

Oct 28, 2016

Siragu-ellaam-kodukkum-tamil1

இளம் தமிழர் படையே வருக வருக

இனம் தழைக்க வேற்படை வருக வருக!

கொடுந்தீமை படையினை அழிக்க சினம்

கொண்டு தமிழர் யாவரும் வருக வருக

 

எத்திசையிலும் போர் முரசெழுப்பியே வன்நரிப்

படைகள் வருவதனை யாவரும் ஏற்ப்பீரோ?

வடநாட்டினநரிக் கூட்டமொன்று நம்

வளமான நிலம் தேடி வருவதனை அறிவீரோ?

 

வன்தொடைகட்கு முன்னே அக்கூட்டம் நிற்பதனை

வண்தன்மை தமிழன் எந்நாளும் ஏற்கலாகுமோ?

விரிந்த மார்பினையுடைய இளமாறனுனக்கு

வாளாய் தமிழர் வளர்த்த நல்லறம் இருக்கு!

 

வன்நரிக் கூட்டமிடுகின்ற ஓலங்கள் நந்தமிழர்

வளர்த்த நல்லறத்தை அழிக்குமென்ற நகையை

நல்நெஞ்சுரம் கொண்ட தமிழர் யாவரும்

நரிக்கூட்டத்தின் நாவினையறுக்க கொலை வாளினை

ஏந்தி போர்க்களம் வருக!

ஏறுநடையிட்டு வருக வருக!

 

வருந்நரிக் கூட்டம் காட்டும் சினத்தயைடக்கி நம்

வாளுக்கு மணிமகுடமாய் அதன் தலையை சூட்டுவோம்

கொடுஞ் சொல்லை வீசிடும் கூர்ப்பல்லினை வெட்டி

வடமாலையாய் அவர்கட்கு சாத்துவோம்!

 

தமிழுக்கெதிராய் வன்கோலினை எடுக்கும் யாவருக்கும்

தக்கபாடம் புகட்டுவோம்! வீரர்களே வருக !

இளம் தமிழர் படையே வருக வரு!

தமிழினம் காக்க போர்களம் நோக்கி

திரளாய்அணியணியாய்வருகவருக!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இளம் தமிழர் படையே வருக வருக!(கவிதை)”

அதிகம் படித்தது