செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை



May 9, 2017

தமிழகத்தைச் சேர்ந்தவரும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ். கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்சய் கிஷன் கவுள் உட்பட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறினார்.

Siragu justice-karnan

இதைத் தொடர்ந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றம். இவ்வழக்கில் நீதிபதி கர்ணன் மன நல பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மனநல பரிசோதனைக்கு மறுத்த நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்குத்தான் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தம்மை உச்சநீதிமன்றம் துன்புறுத்தியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 8 பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தும், இவரது அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை”

அதிகம் படித்தது