ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: சினிமா திரையரங்குகளில் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்Nov 30, 2016

நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

siragu-national-flag

திரையரங்குகளில் படம் துவங்கும்முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும், அப்போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும், மேலும் தேசியகீதம் இசைக்கும்போது திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த உத்தரவை மீறும் திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்து மாநில அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: சினிமா திரையரங்குகளில் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்”

அதிகம் படித்தது