ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் தீர்ப்பு வழங்க வேண்டும்May 9, 2017

தமிழக கீழ் நீதிமன்றங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தீர்ப்பு வழங்கலாம் என 1994ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக மதுரை கிளையில் மூன்று வருடத்திற்கு முன்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது.

Siragu Supreme_Court_of_India

இந்த வழக்கில் கீழ் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து வசந்தகுமார் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இவ்வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கக்கூடாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: தமிழகத்திலுள்ள கீழ் நீதிமன்றங்களில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் தீர்ப்பு வழங்க வேண்டும்”

அதிகம் படித்தது