மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: தொழிலதிபர் விஜய் மல்லையா ஜூலை 10ல் நேரில் ஆஜராக வேண்டும்May 9, 2017

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9000 கோடி கடன் பெற்றார். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதலால் அவருக்கு வங்கிகள் நெருக்கடி கொடுத்தது.

Siragu vijay mallaya

இதனால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றார் விஜய் மல்லையா. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் விஜய் மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியா இங்கிலாந்து அரசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

மேலும் விஜய் மல்லயாவை கைது செய்தது லண்டன் பெருநகர போலிஸ். அவரை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் லண்டனில் முகாமிட்டுள்ளனர்.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வங்கிகள் சம்மேளம் வழக்கு தொடுத்தது. இதில் அவர் ஆஜராகாமல் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். தொடர்ந்து சொத்து விவரங்களையும் கேட்டது. இதற்கு தவறான பதில் அளிக்கப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது வங்கிகள் சம்மேளம்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், தொழிலதிபர் விஜய் மல்லையா ஜூலை 10ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: தொழிலதிபர் விஜய் மல்லையா ஜூலை 10ல் நேரில் ஆஜராக வேண்டும்”

அதிகம் படித்தது