மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்Mar 31, 2017

2017-18 கல்வி ஆண்டில் மருத்துவ சேர்க்கைக்கான நீட்(தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்வு வரும் மே மாதம் 7ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு இதுவரை நாடு முழுவதிலும் 11,35,104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Siragu abaththangal2

தமிழகத்தில் 88,478 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ந்தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டிருந்தது. தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா இல்லையா என்பதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை.

இந்நிலையில் மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை, எனவே நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளதால், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு கால அவகாசம் கேட்டும், சிபிஎஸ்இ இத்தேர்வை எழுத 25 என்று வயதை நிர்ணயித்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கின் விசாரணையில் ஏப்ரல் 5 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சிபி’எஸ்இ தேர்வை எழுத நிர்ணயித்த 25 வயது என்பதை ரத்து செய்தும் தீர்ப்பளித்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்”

அதிகம் படித்தது