அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலிருந்து லாலுவை விடுவிக்க மறுப்புMay 8, 2017

லாலு பிரசாத் யாதவ் 1990 லிருந்து 1997 வரை பீகார் மாநில முதல்வராக இருந்தபோது, மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

Siragu lalu

பீகாரில் அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் மாட்டுத் தீவன ஊழலில் போடப்பட்டது. அதில் ஐந்து வழக்குகள் லாலு மீது பதியப்பட்டது. இவ்வழக்கில் இவரை குற்றவாளி என தீர்மானித்து 2013ல் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது உச்சநீதிமன்றம்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் லாலு. இவர் மீதான வழக்கு ஒன்றில் இவரை விடுவித்து குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது சிபிஐ.

இம்மனுவின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் சிபிஐ-யின் வாதமான லாலு மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கூடாது என்பதை ஏற்று லாலு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலிருந்து லாலுவை விடுவிக்க மறுப்பு”

அதிகம் படித்தது