டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு ரூபாய் நோட்டு வழக்குகள் அனைத்தும் மாற்றம்Dec 16, 2016

நவம்பர் 8ம் தேதி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதிலிருந்து பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

siragu-supreme-court

இதனால் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை விசாரிக்கக்கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் ரூபாய் நோட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு ரூபாய் நோட்டு வழக்குகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு ரூபாய் நோட்டு வழக்குகள் அனைத்தும் மாற்றம்”

அதிகம் படித்தது