உடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்
சிறகு சிறப்பு நிருபர்Sep 5, 2020
- காய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
- நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும்.
- நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
- கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடுவளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
- கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கற்கண்டை வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.
- பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டுவர மெலிந்த உடல் பருமனாகும்.
- மருந்துக் கடைகளில் கிடைக்கும் தேற்றான் கொட்டை லேகியத்தை தினமும் இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, உடல் தேறி வலு உண்டாகும்.
- முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
- கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
- வேர்க்கடலை வெண்ணெயை ரொட்டிகளில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
- ஆளி விதை உடல் ஆரோக்கியத்தைக் காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவு ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.
- உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.
- தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் “ஈ” உள்ளது. இவற்றில் சமைத்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
சிறகு சிறப்பு நிருபர்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்”