நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

உன்னோடு நான்…! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Nov 19, 2022

உன்னோடு நான்…!

 

siragu paguththarivu2பூவோடு வாசமாய்

தீவோடு கடலாய்

கடலோடு அலையாய்

உடலோடு உயிராய்

கண்ணோடு இமையாய்

விண்ணோடு விண்மீன்களாய்

மழையில் குடையாய்

நிலவில் கறையாய்

நாலடியாரின் வரிகள் நான்காய்

திருக்குறளின் ஈரடிகளாய்

கீழடியில் தமிழரின் வரலாறாய்

ஈழத்தில் தமிழரின் போராட்டமாய்

தமிழோடு அழகாய்-என்றென்றும்

உன் இதழோடு புன்னகையாய்-என்றென்றும்

உன்னோடு நான்…..!

 

ஈழன்.


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உன்னோடு நான்…! (கவிதை)”

அதிகம் படித்தது