மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உன் கடவுளும் என் கடவுளும்! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Apr 24, 2021

siragu kadavul1

 

உன் கடவுள்

உண்மையென்றால்

என் கடவுளும் உண்மைதான்

என் கடவுள்

பொய்யென்றால்

உன் கடவுளும்

பொய்தான்.

நம்பிக்கை

உண்டென்பதுவும்

இல்லையென்பதுவும்

அவரவர் நம்பிக்கை.

நிற்க!

உன் கடவுளும்

என் கடவுளும்

“யார் உண்மையானவர்

யார் பொய்யானவர்? “ என்று

தமக்குள் சண்டைபோட்டுக்கொண்டதாய்

இதுவரை யாரும் எழுதிவைத்ததாய்

நானும் அறியவில்லை.

அறியாத ஒன்றை

எவரோ சொல்லிவைத்ததை நம்பியே

அனைத்தும் அறிந்ததாய்

நானும் நீயும்தான்

சண்டைபோடுகிறோம்

அறியாமலே.

 

ஈழன்.

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உன் கடவுளும் என் கடவுளும்! (கவிதை)”

அதிகம் படித்தது