டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்ற மதுரை கிளை: தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதிMar 2, 2017

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பான ஆலைகள், தாமிரபரணி மற்றும் திருநெல்வேலி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். ஆற்றிலிருந்து நீர் எடுப்பதை எதிர்த்து பிரபாகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

Siragu madurai high court

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கிறது, மேலும் 1000 லிட்டர் தண்ணீருக்கு ரூ. 37.50 மட்டுமே கொடுத்து தண்ணீர் எடுக்கின்றன. குறைந்த விலைக்கு தண்ணீரை எடுத்து, குளிபானங்கள் மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கின்றனர். எனவே தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று அவர் அளித்த மனுவில் இருந்தது.

சென்ற நவம்பரில் இம்மனு விசாரணைக்கு வந்தபொழுது, தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு தடை விதித்தது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்தினர் மனுதாக்கல் செய்தனர். உபரியாக செல்லும் நீரைத்தான் பயன்படுத்துவதாக ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று குளிப்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்ற மதுரை கிளை: தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி”

அதிகம் படித்தது