நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ஊடகம்! (கவிதை)

இல. பிரகாசம்

Jul 8, 2017

Siragu oodagam1

 

நாளும் புதுப்புது கருத்தைத் தரிப்பாள்

நடப்பவை யாவையும் “தன்”மையால் தீட்டுவாள்

நகையணி மொழிபோல் பலசொற் கட்டுடன்

உரைநடையாய் நவின்றே நல்மொழி இயம்புவாள்

 

உலகம் விளைத்த புதுமைகள் யாவையும்

உயிர்ப்புடன் விளங்க எழுத்தால் எழுவாள்

பலமொழி நவின்ற பழமொழிச் சுவைகளை

பலநாட்டு மக்கள் சுவைக்கச் சமைவாள்

 

பாமரர் அறிவுநெறி விளங்கவே -பாவையவள்

பகுத்தறிவுக் கொள்கை சுடரேந்தி இருளால்

பகடிசெய்யப் பட்டோரது வாழ்வில் துலங்க

பத்திரிக்கை பெண்ணாய்ப்; பிற்பினை எடுத்தாள்

 

அறிஞர் நெறிஞர் வினைஞர் கலைஞர்

அரும்பெருந் தன்மை யுடையோரது சிறப்பினை

அகிலம் முழுதும் பரப்பும் வகையால்

பத்திரிக்கை ஊடகத்தை உடலாய் பெற்றாள்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊடகம்! (கவிதை)”

அதிகம் படித்தது