மே 19, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

எது கவிதை? (கவிதை)

நா.தீபா சரவணன்

Nov 25, 2017

Siragu chettinadu poet1

புதுமைதான் கவிதை என்றால்

ஒவ்வொரு விடியலும் கவிதைதான்!

வேதனை தான் கவிதை என்றால்

ஒவ்வாரு பிரிவும் கவிதைதான்!

 

இயற்கைதான் கவிதை என்றால்

ஒவ்வாரு சீற்றமும் கவிதைதான்!

காதல் தான் கவிதை என்றால்

ஒவ்வாரு அன்பும் கவிதை தான்!

 

அமைதிதான் கவிதை என்றால்

ஒவ்வாரு மௌனமும் கவிதைதான்!

அழகுதான் கவிதை என்றால்

காட்சிகள் யாவும் கவிதை தான்!

 

பிறப்புதான் கவிதை என்றால்

ஒவ்வாரு ஜனனமும் கவிதைதான்!

வாழ்க்கை தான் கவிதை என்றால்

ஒவ்வாரு அனுபவமும் கவிதைதான்!

 

மொழிதான் கவிதை என்றால்

மழலையின் அழுகையும் கவிதைதான்!

வெற்றி தான் கவிதை என்றால்

ஒவ்வொரு போராட்டமும் கவிதைதான்!

 

தோல்வி தான் கவிதை என்றால்

ஒவ்வாரு ஏமாற்றமும் கவிதை தான்!

இழப்பு தான் கவிதை என்றால்

ஒவ்வாரு மரணமும் கவிதை தான்!


நா.தீபா சரவணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எது கவிதை? (கவிதை)”

அதிகம் படித்தது