மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எனக்குள் எழும் கவிதை ! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 17, 2021

siragu kavithai1

 

ஒரு நீரூற்றின்
வீச்சு போல
ஓர் எரிமலையின்
கொதிப்புபோல
ஒரு கொன்றைச் சரத்தின்
நீளம்போல
ஒரு புயலின்
சுழற்றி்ச்சிப்போல
ஒரு கருமேகத்தின்
சூல்போல
ஓர் அரவத்தின்
வழித்தடம்போல
ஒரு மண்புழுவின்
நகர்தல்போல
ஒரு மலரின்
மலர்தல்போல
எரிகின்ற காடுகள்போல
தாவி ஓடும் முயலின்
கண்களின் அச்சம்போல
மனதின் ஓரத்தில்
திடீரென மின்னலடிக்கும்
தென்றலின் தொடுதல்போல
மேனித் தழுவிச்செல்லும்
மீன் முள்போல தொண்டையில்
சிக்கிக்கொண்டு படுத்தி எடுக்கும்
எனக்குள் எழும் கவிதை  !


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எனக்குள் எழும் கவிதை ! (கவிதை)”

அதிகம் படித்தது