என்னால் மூச்சு விட முடியவில்லை! (கவிதை)
ராஜ் குணநாயகம்Nov 12, 2022
என்னால் மூச்சு விட முடியவில்லை
அடக்கி ஒடுக்கப்படும்
மனிதக்கூட்டத்தின்
தேசிய கீதமோ?
ஆர்மேனியா தொடங்கி
முள்ளிவாய்கால்
புளோய்ட்டுக்கள் என
பல்லாயிரம் ஆன்மாக்களின்
இறுதி மரண ஓலமோ?
ஆளும் வர்க்கத்தின்
துவேசக்கரங்கள்
எங்கள் சுதந்திரம் எனும் குரல்வளையை
எப்போதுமே நசித்துக்கொண்டுதான் இருக்கின்றது..
எங்களால் மூச்சு விட முடியவில்லை!
இதுவே முடிவுமல்ல
அஃதே
தொடக்கமுமல்ல..
இது ஓர் தொடர்கதை
அவ்வப்போது
ஆளும் வர்க்கம் எழுதிக்கொண்டேயிருக்கும்
தர்மம் புதைக்கப்பட்டு
அநீதி விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
இப்பூமியில்!
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்னால் மூச்சு விட முடியவில்லை! (கவிதை)”