ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

என்றும் வாழும் தலைமகனார்! (கவிதை)

இல. பிரகாசம்

Feb 18, 2017

Siragu-ellaam-kodukkum-tamil1

 

 

(தமிழறிஞர் மணவை முஸ்தப்பா)

அகரமுதல் னகரம்வரை தமிழில்

அறிவியல் சிந்தையை தேடியவர்

மாசறத் தாம்கற்றுத் தெளிந்த

மாத்தமிழ் நுட்பம் யாவையும்

அறிவியல் சிந்தைக்கு உட்படுத்தியவர்

அண்ணார் அறிந்த அருந்தமிழ்

அறிவுக் களஞ்சிய மணைத்தும்

அறிவியல் இலக்கியச் சமுதாயத்தை

விளைத்திடவே; அல்லும் பகலும்

அயராது அண்ணைத் தமிழுக்கு

அருந்தவத் தொண்டினை ஆற்றினார்

 

செந்தமிழ் மொழியெங்கள் தமிழ்மொழி

முன்னைப் பழமைக்கும் பழமை

மாறிவரும் புதுமைக்கும் புதுமையென

தமிழ்மொழி சிறப்பினை எழுத்தால்

தனித்த வாதத்தால் வென்றார்

தமிழுலகம் சீர்பெற்று வாழ்ந்திட

அறிவியல் பார்வை கொண்டு

ஆய்வுக் கட்டுரைகள் எழுதியெழுதி

தமிழின் மாண்பை நாட்டினார்

தம்அறிவு நுட்பத்தை தண்டமிழ்

இலக்கிய நூலுள் ஆண்டார்

 

உலகரங்கில் தமிழின் தொண்மை

இனிமைவளமை தாய்மை தனித்தன்மை

பொதுமை பண்பாடு நடுவுநிலை

கலைப்பட்டறிவு வெளிப்பாடு இலக்கிய

வளமை பிறமொழித்தாக்க மின்மையென

திறனாய்வு செய்து தமிழ்மொழி

மேன்மையினை பறைசாற்றிய அறிஞர்

மணவை முஸ்தப்பா தமிழ்மொழி

தலைமகனார் அவர்புகழ் இத்தமிழ்

மண்ணுலகம் வாழுங்காலம் யாவும்

அண்ணவர் ஆற்றியஅருந் தவத்தொண்டினை

இத்தமிழுலகம் நாளும்போற்றி வாழ்க!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்றும் வாழும் தலைமகனார்! (கவிதை)”

அதிகம் படித்தது