மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என் கேள்விக்கென்ன பதில் – பகுதி 1

ஆச்சாரி

Oct 15, 2013

கேள்வி: பொறியியல் படித்தவர்கள் அவர்கள் துறையிலேயே வேலை பெற என்ன செய்ய வேண்டும்?     

                                                                                                                                                                             கேள்வி கேட்டவர்: தியாகு

பதில் அளிப்பவர்:    உமா சங்கர்

பதில்: முதலில் மாணவர்கள், படிக்கும் முன் தனக்குப் பிடித்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 1.Production, 2.Quality, 3.Maintanance, 4.Design,Product Development, planning, Sales, Purchase , Stores Supplier, Vendor Development, Plant Engineering, Project, Customer support, Site Construction, Supply chain management இவை அனைத்தும் மெக்கானிக்கல், சிவில் எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு இது பொதுவான துறைகளாகும். இதில் ஏதேனும் தனக்குப் பிடித்தமானஒன்றை, படிப்பவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

படி 1: தேர்ந்தெடுத்தவற்றில் தனது ஆற்றலை சுயபரிசோதனை செய்யவேண்டும். (Skill-matrix, SWOT-Analysis, Competency mapping)

படி 2: சுயபரிசோதனை முடிவில் தன்னிடம் இல்லாத திறனை நேர்முகத்தேர்வுக்கு தேர்ச்சி பெறக்கூடிய வகையில் வளர்த்துக்கொள்ளவேண்டும்

படி 3: உடனடியாக தன் துறைசார்ந்த நிறுவனங்களுக்கு,  நேர்முகத் தேர்வுக்கு அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும்.

படி 4: நல்லபடி இந்த நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்று கடின உழைப்பிற்கு மனதளவிலும், உடலளவிலும்  தயாராக இருக்க வேண்டும்.

   .கா.ஒரு (மெக்கானிக்கல்) இயந்திரவியல் துறை சார்ந்த படிப்பை முடித்த ஒரு நபரை எடுத்துக்கொள்வோம்.

படி 1: இவர் தேர்ந்தெடுத்தது தர நிர்ணயத்துறை என்றால் (Quality Dept).இத்துறையில் உள்ள உட்பிரிவுகளாவன, Supplier Quality, Inward Material Quality, In Process Quality, Final Quality, Product Quality, Customer Quality, Standard room Quality, Dispatch Quality, Line quality, Quality Management, System ISO Quality, Process Quality, இந்த வேலைகளில் எவற்றை எல்லாம் தனக்கு நன்றாக வேலைசெய்யத்தெரியும் என்பதை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

படி 2: இந்த வரிசைப்படுத்தியவற்றில் தனக்குத் தெரியாதவற்றை புத்தகங்களைப் படிப்பதின் மூலமாகவோ,தனியார் பயிற்சி நிறுவனங்களில் படிப்பதன் மூலமாகவோ திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

படி 3: சரியான முறையில் மேற்குறிப்பிட்ட தகுதியைப் பூர்த்திசெய்த தன் சுயநிலைக்குறிப்பை (Bio-Data) எல்லா நிறுவனங்களுக்கும் நேர்காணல் அனுமதியைப் பெற அனுப்ப வேண்டும்.

படி 4: நேர்முகத்தேர்வில் தன்னைவிற்கும் ஆற்றல் படைத்தவராக முன்னிலைப்படுத்த வேண்டும்மேலும்உயர்அதிகாரிகளுக்கு என்ன தேவையோ அதைத் தன்னால் தரமுடியும் என்பதை இங்கே உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பு படி: 1 ல் உள்ள தகவல் பற்றி அடுத்த சிறகு வெளியீட்டில் காண்போம்மேலும் மேற்கண்ட துறைகள்  சம்பந்தமான கேள்விகள் கேட்க விரும்புவோர் இப்பகுதியில் உங்களுக்கு ஏற்படும் கேள்விகளைப் பதிவு செய்யலாம்இவ்வாறு பதிவு செய்த பின் உங்கள் கேள்விகளுக்கான பதில் அடுத்து வரும் சிறகு வெளியீட்டில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .

·        இலவச பயிற்சி வகுப்புகள்.

* மேலும் இத்துறை சார்ந்து சிறந்த கேள்விகள் கேட்கப்படும் வாசகர்களுக்கு, இவர் விரும்பினால் 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மேற்கண்ட துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

*பிடிக்காத ஒருவருடன் வாழும் பொழுது, அவரிடமிருந்து என்ன காரணம் கூறி விவாகரத்துப் பெறலாம்?

                               கேள்வி கேட்டவர்: சேகர்

       பதில் அளிப்பவர்:  வழக்கறிஞர் – செந்தமிழ்ச்செல்வன்    

பதில்: என்பது இருமனம் இணையும் ஒரு சமூக ஒப்பந்தம். இதில் பெரியோர்பார்த்து திருமணம் செய்து வைத்தாலும், தானாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் மனம் ஒத்துப்போகவில்லை என்றால் அந்த குடும்ப வாழ்க்கை இனிமையாக இராதுஇன்றைய காலச் சூழலில் திருமணம் என்றால் என்ன? குடும்பம் என்றால் என்ன? எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது? என்ற அடிப்படை முறையே தெரியாமல் இன்றைய இளசுகள் வாழத்துவங்குவதால் தான் திருமணமான சிறிது நாட்களிலேயே இவர்களுக்குள் கருத்துவேறுபாடுஏற்பட்டு இறுதியில் மணமுறிவு வேண்டி நீதிமன்ற வாசலுக்கு வந்துவிடுகின்றனர்.

இல்லை என்றால் திடீரென தலைமறைவாகிவிடுகின்றனர், அல்லது தன் மனதிற்குப் பிடித்த வேறொருவருடன் சட்டத்திற்கு உட்பட்டோ, அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ வாழ்ந்து வருகின்றனர். இதில் சட்டப்படி இவர்கள் பிரிவது என்றால் பின்வரும் காரணங்கள் அடிப்படையில் விவாகரத்துப் பெறலாம்.

1.மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்

2.தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவிற்கு மனநோய்க்கு ஆளாகுதல்.

3.வாழ்க்கைத் துணையைத் தவிர்த்து வேறொரு நபருடன் உறவு கொள்ளல்.

4.மனுதாரரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்.

5.தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்.

6.தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்.

7.திருமணமான தம்பதியர் இருவரில் எவரேனும் ஒருவர் ஓரினப்புணர்ச்சி (Sodomy) விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality)கொண்ட குற்றம் செய்தல்.

8.தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகள் குறையாத சிறைதண்டனை பெறுதல்.

        ஆகிய சூழல்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உயர்நீதிமன்றத்தை அணுகி மனமுறிவு கேட்டு மனுசெய்யலாம்.     

Reston, va national best online essay writers council on teachers of mathematics

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என் கேள்விக்கென்ன பதில் – பகுதி 1”

அதிகம் படித்தது