மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எல்லா உவமைகளும் தோற்று விடும்….

ஆச்சாரி

Jun 7, 2014

அம்மாவுக்கு

வலி கொடுத்து வெளி வருவதற்கு முன்னால்

நிகழ்ந்தவைகள் பற்றி…

 

ellaa uvamaigalum3

பருவ மாற்ற நிகழ்வுகளில்

மகிழ்ச்சியை மட்டும் வெளியேற்றினார்…..

அடிக்குமட்டல், வாந்தியின் போதெல்லாம்

அருவெறுப்பில்லை……..

நாட்கள் நகர

இடை கனத்தது……

பாரம் சடை பின்னியது….

வாய்க்குழியினுள் பிரவேசிக்கும்

இத்யாதிகளும் அதிகரித்தன……

நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடக்கும் சுதந்திரம்

பறிபோனது…

நடையிலும் அசைவிலும் வேகம் குறைந்து

பாதங்கள் வீங்கத் தொடங்கின……..

நாட்கள் செல்லச் செல்ல

உதைத்தல், வலி கொடுத்தலில்

இன்பம் செய்தன கண்கள்…….

இருட்டறை

ஆனால் மிகுந்த பாதுகாப்பு –

வார்த்தைகளில்லை –

எல்லா உவமைகளும் தோற்று விடும்

காதல், நேசம், பரிவு, அன்பு

போன்ற சொற்கள்

உண்மையான உணர்வினை பரிசளித்தன

உருவம் தெரியாத உருவம் ஒன்றின் மீது…….

காத்திருப்பிலும் எதிர்பார்ப்பிலும்

இன்பம் கூடியது……

நாள் குறித்து, நலம் கெடுமுன்

கட்டிலை நிறைத்தனர்….

மிகுந்த பலயீனம் மற்றும்

அலறும் அழுகுரலும் பரிசளிக்கப்பட்டது……

வலி கொடுத்து வெளி வருவதற்கு முன்னால்

நிகழ்ந்தவை…

 

ellaa uvamaigalum2

காகிதமும் போதாது

பேனைகளும் போதாது

அம்மாவுக்கு

வலி கொடுத்து வெளிவந்த பின் நடந்தவை

பற்றிச் சொல்ல…………..

Verbal agreement help me do my homework at www.cheephomeworkhelp.com should be obtained and documented

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எல்லா உவமைகளும் தோற்று விடும்….”

அதிகம் படித்தது