அக்டோபர் 12, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

எஸ்.பி.ஐ அறிவிப்பு: ஏ.டி.எம்- களில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 25 கட்டணம்May 11, 2017

வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5000இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கயாளர்களுக்கு அறிவித்து இருந்தது. மேலும் குறைந்த இருப்பு வைத்திருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்தது.

Siragu sbi

எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் எந்த வங்கியின் ஏ.டி.எம்-களிலும் பணம் எடுத்தாலும், எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு ஜூன் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது. மேலும் பழைய கிழிந்த நோட்டுகள் ரூ.5000க்கு மேல் மாற்றுவதற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கூறப்பட்ட நிலையில், இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாடிக்கயாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எஸ்.பி.ஐ அறிவிப்பு: ஏ.டி.எம்- களில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 25 கட்டணம்”

அதிகம் படித்தது