அக்டோபர் 19, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

எஸ்.பி.ஐ: ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம் இல்லைMay 12, 2017

எஸ்.பி.ஐவங்கியில் கணக்கு வைத்திருப்போர் எந்த வங்கியின் ஏ.டி.எம்-களிலும் பணம்எடுத்தாலும், எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்என்றும், இந்த அறிவிப்பு ஜூன் 1முதல் அமலுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தது.

Siragu sbi

இந்த அறிவிப்பில் பிழை ஏற்பட்டுள்ளது என்று எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். ஏ.டி.எம்-களில் பணத்தை எடுக்க எந்த சேவை கட்டணமும் இல்லை என்றும், எஸ்.பி.ஐ படி செயலி மூலமாக பணம் எடுக்கும் புதிய சேவைக்குத்தான் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ நிர்வாக இயக்குனர் ராஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் மொபைல் வாலெட் பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் போதும், எடுக்கும் போதும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எஸ்.பி.ஐ: ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம் இல்லை”

அதிகம் படித்தது