பிப்ரவரி 16, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

ஏர்முனை நாகரீகம்(கவிதை)

இல. பிரகாசம்

Apr 22, 2017

siragu-Naanjil-nadu-fi

காலம் தோறும் வெயில் சாரலில்

எங்கள் வியர்வை குளியல்

வைரத் துளிகளையும் -வெண்

முத்துத் துளிகளையும் உதிர்க்கும்

எங்கள் கருமைத் தோள்கள்

 

செம்மண் புழுதியும்; கருமண் புழுதியும்

நாங்கள் நாள்தோறும் உடுத்தும் உடைகள்

 

ஆதிகால நாகரிகம் எங்கள் நாகரீகம்

உலகினில் என்றும் அழியாத நாகரீகம்

எங்களது வரலாறு நீண்ட தொடர்ச்சியானவை

காலம் வரையறை செய்ய இயலாதவை

உலகனில் நாகரீகம் பரிணமிக்க>

முன்னோக்கிச் செல்ல> ஏர்முனையாக விளங்குபவை

எங்கள் நாகரீகம்! ஏர்முனை நாகரீகம்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏர்முனை நாகரீகம்(கவிதை)”

அதிகம் படித்தது