சனவரி 13 , 2018 இதழ்
தமிழ் வார இதழ்

ஏற்றுமதி செய்வீர் ஏற்றம் காண்பீர் – ஆசிரியர் அரிதாசன் – நேர்காணல்

ஆச்சாரி

Nov 1, 2012

திரு அரிதாசன் அவர்கள் பன்முக ஆளுமை கொண்ட சிறந்த மனிதர், வேளாண்மை குறித்த சரியான  தகவல்கள் விவசாய பெருங்குடி மக்களிடம் சென்று சேர்வதற்காக நவீன வேளாண்மை என்னும் இதழை அவர் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி ஏற்றுமதி இறக்குமதி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அவை குறித்த பயிற்சி வகுப்பும் பல ஊர்களில் நடத்துகிறார். மேலும் தொலைக்காட்சிகளில் தோன்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நேயர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். சிறகு சார்பாக அவருடன் நடத்தப்பட்ட நேர்காணல்.

1.தங்களது பத்திரிக்கை மற்றும் வலைத்தளம் பற்றி ஒரு அறிமுகம்?

நான் நவீன வேளாண்மை என்ற பத்திரிக்கையை கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதில் முழுக்க முழுக்க வேளாண்மை எவ்வாறு செய்வது என்பது குறித்த தகவல்களை கொடுத்துள்ளேன். எங்களுக்கு சந்தை www.chandhai.com என்ற வலைத்தளமும் உள்ளது. இதில் பொருட்களை வாங்கவும் விற்கவும் வசதிகள் உள்ளன.

2.விவசாயத்திற்கான ஒரு இதழை ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்கு எவ்வாறு உருவானது?

சரியான தகவல் சரியான துறைக்குச்சென்று சேர்வதில்லை,வேளாண் சார்ந்த தகவல்கள் இன்னும் மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை, இதன் காரணமாகவே நான் இந்த இதழை தொடங்கினேன்.

3.நவீன வேளாண்மை என்பது என்ன? வழக்கமான விவசாயத்திற்கு மாற்றமாக இதை எவ்வாறு முன்னெடுக்க முடியும்?

நம் நாடு ஒரு விவசாய நாடு,இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர். நவீன வேளாண்மை என்பது வேறொன்றுமில்லை நாம் அன்றாடம் செய்யும் விவசாயம் தான். எந்த முறையில் விவசாயம் செய்தால் அதிக மகசூல் கிட்டும் மற்றும் விவசாயம் சார்ந்த தகவல்கள்,நுணுக்கங்களை கூறுவதே நவீன வேளாண்மை.

4.நீங்கள் ஏற்றுமதி பற்றிய பயிற்சி வகுப்பு நடத்துகிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்?

ஆம், நாங்கள் ஏற்றுமதி பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம் இதில் ஏற்றுமதி குறித்த அனைத்து தகவல்களும் நாங்கள் தருகிறோம், எந்தெந்த பொருள் எந்தெந்த நாடுகளில் யாரெல்லாம் வாங்குகிறார்கள் அவர்களை எப்படி கண்டுபிடிப்பது, பொருட்களை அனுப்பி வைக்கும் வழிமுறைகள் என்னென்ன, எப்படி காப்பீடு செய்துகொள்வது, ஆவணங்கள் என்னென்ன தயாரிக்க வேண்டும், மானியம் எப்படி பெற வேண்டும் என்பது போன்ற தகவல்களையும் நாங்கள் தருகிறோம், ஏற்றுமதி குறித்த சந்தேகங்களையும் நாங்கள் நிவர்த்தி செய்து வருகிறோம். எங்களிடம் பலர் பயிற்சி பெற்று பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

5.நமது நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில் ஏற்றுமதி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறதா?

ஏற்றுமதி குறித்த மக்களின் விழிப்புணர்வு தமிழகத்தில் சற்று குறைவே, தமிழகத்தில் மொத்தம் நான்காயிரம் ஏற்றுமதியாளர்களே உள்ளனர்.இந்த குறையை சரி செய்யவே நாங்கள் இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.மேலும் தொலைக்காட்சி மூலமாகவும் ஏற்றுமதி குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறோம்.

என்று நாம் உலகமயமாதலில் இந்தியா சார்பாக கையேப்பமிட்டோமோ அப்போதே ஏற்றுமதி இறக்குமதி, உலகச்சந்தை குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்திருக்க வேண்டும் ஆனால் அதைச் செய்யவில்லை, உலகிலேயே அதிக வளங்கள் உள்ள நாடு இந்தியா தான் ஆனால் ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கியே உள்ளது. நம்மைக்காட்டிலும் வளங்களில் குறைவாக உள்ள பல நாடுகள் ஏற்றுமதியில் நல்ல நிலையில் உள்ளது.ஜப்பான் நாடு எந்தவித வளங்களும் இல்லாத நாடு. அந்நாடு இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து வளங்களை பெற்று அதன் மதிப்பை கூட்டி மின்பு அதனை நமக்கே ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

6.தமிழ் நாட்டில் இருந்து எந்தெந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்? வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் எந்த அளவில் உள்ளன?

குறிப்பிட்டு இதை மட்டும் தான் அதை மட்டும் தான் என்று ஒன்றும் இல்லை எதை வேண்டுமானாலும் நாம் ஏற்றுமதி செய்யலாம்.நமது பாரம்பரிய தொழிலே விவசாயம் தான் ஆகையால் உணவுப்பொருட்கள், வேளாண் பொருட்கள் அனைத்தையும் நாம் ஏற்றுமதி செய்யலாம், மூலிகை பொருட்கள், கைவினைப்பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்.எந்தெந்த பொருட்களுக்கு தேவை அதிகம் உள்ளது என்று அறிந்து  அதனை ஏற்றுமதி செய்வது சிறந்தது.

7.நாம் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்வது லாபகரமாக இருக்கிறது?

பொருளாதாரத்தடை விதித்துள்ள நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம்.

8.சிறு மற்றும் குறு தொழிலாக ஏற்றுமதியை செய்யமுடியுமா? முதலீடு எந்த அளவில் இருக்க வேண்டும்?

கட்டாயம் செய்ய முடியும், ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு எந்த ஒரு படிப்பறிவும் தேவையில்லை, சாதாரணமாக குடிசையில் வசிப்பவர்கள் கூட இதனைச்செய்ய முடியும்.இதனை பகுதி நேரமாகவும் செய்யலாம். இதனைச்செய்வதற்கு பதிவு கட்டணமாக வெறும் 250 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.

9.உங்களது நிறுவனம் மற்றும் பத்திரிக்கை மூலமாக எத்தனை பேர் ஏற்றுமதி தொழிலில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்? அவர்களைப் பற்றி சில வார்த்தைகள்?

எங்களிடம் பலர் ஏற்றுமதி இறக்குமதி பயிற்சியை கற்றுக்கொள்கின்றனர், பல தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ளவர்களும் எங்களிடம் பயிற்சி பெற்று ஏற்றுமதியாளராக இருக்கின்றனர்.எங்களிடம் கற்றுக்கொண்டவர்களுள் சிலர் அறுபது இயற்கை அங்காடிகளை தொடங்கி உள்ளனர். இக்கடைகளில் எந்தவித இடைத்தரகர்களும் இல்லை. இக்கடைகளில் நேரடியாக விவசாயிகளே சென்று தங்களது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

(குறிப்பு: சிறகு சார்பாக ஏற்றுமதி இறக்குமதி பயிற்சி பெற்றுக் கொண்டவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியவை: நாங்கள் இருவரும் கணவன் மணைவியர் நாங்கள் TCS நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தோம் ஏற்றுமதி இறக்குமதி குறித்த பயிற்சியை பெற்றோம் பின்னர் இதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று பகுதி நேரமாக ஆரம்பித்தோம் தற்பொழுது நல்ல நிலையில் உள்ளது. எனது மணைவி TCS வேலையை விட்டுவிட்டு தற்பொழுது முழுநேர வேலையாக ஏற்றுமதி செய்து வருகிறார்.நாங்கள் மூலிகை பொருட்களை மலேசியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்துவருகிறோம்.)

10.உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்ன?

எதிர்காலத் திட்டம் என்று ஒன்றும் இல்லை. வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்வேன்.

அரிதாசன் அவர்களின் தொடர்பு :

கைப்பேசி +91-94442 83129 ,+91-94441 46807

மின்னஞ்சல்         care@chandhai.com, nvelaanmai@gmail.com

They told us they needed to know much more about doing or directing theses and dissertations than they found in college catalogues, graduate writing helper office instructions, or discussions with those who had experienced the process

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

46 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஏற்றுமதி செய்வீர் ஏற்றம் காண்பீர் – ஆசிரியர் அரிதாசன் – நேர்காணல்”
 1. B.Prakash says:

  Dear Sir,

  I want to successfull bussiness on export and import kindly guide me which are the ground rule we have to follow-up to meet great business man.

 2. Balamurugan says:

  sir, nan engineering student nanga frinds ah senthu padikum pothe ,, import and export business pannalama,,, plz give ur valuable answer

 3. c. mohammed zakir says:

  i am interested to export pasi(in tamil) pls help me and explain about that

 4. suresh kumar.s says:

  dear sir; i am making a college file item. i have like to export to other coantary .how to export sir pls help me sir

 5. sivakumar says:

  iam full satisfied your erode clase full confrance to my life realy your my god thanking you sir

 6. kalai says:

  வனக்கம்.னான் வசிப்பது சேலம் . என்னுடைய தம்பி துவரம் பருப்பு மில் வைத்துல்லார்.அதனை ஏற்ற்ருமதி செய்ய தகவல் தரவும். எனக்கு அவற்களூடைய முகவரி தரவும்.மேலும் எங்கு தேவைபடுகிரது என்ட்ரு தெரிவிக்கவும்.

 7. komathu says:

  hi sir gd evening
  im komathi from malaysia…recently we got to know that you are coming to m’sia
  may i know when is the date for seminar
  kindly gv us the full details tqvm

 8. K.Ramachandran says:

  very useful programme, i will attend next training, i am from Rajapalayam.. thank you sir

 9. N.THIAGARAJAN MADURAI says:

  sir very very usefull programme thankyou

 10. muralidharan says:

  அன்புள்ள ஆசிரியருக்கு,
  உங்களுடைய நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக இருந்தது. நீங்கள் ஏற்றுமதிக்கு உள்ள ஆர்டரை தெரிவித்து கொடுப்பீர்களா?

 11. michael.s says:

  very very good new from mr, Aridhasan thanks a lot

 12. selvi says:

  sir

  i would like to do export. in particular i would like to export sirukurinjan and kathalai so i request you to kindly help me to get the guidance from u regarding the where market oppurtunity and how can we do it succesfully

  thanks
  selvi

 13. sundaralingam says:

  sir neengal ettrumathi thodarbaka engu pairchi kodukkireerkal .please address.

 14. m.priyanka jayaraj says:

  its very intresting and usefully i am intrested with u contact me

 15. Pras says:

  Like many guys i also went to his class, but its completely fake. I was really interested when i heard everything in class he said just 250Rs is enough to take IE code, i also really admired and trust him, but when i applying this license i spent around 20000 Rs. After that i called haridhasan for some inquiry but that bloody man didnt even respond to my question. I was very sad, after that only i realized its full of commercial, He is never been service oriented guy but he represents him in a way that, he is service oriented. Per person he is earning (scratching from us) around 2500 Rs, its basically sitting and cheating people and earning money. So dear guys dont waste your money, please learn this business in real time, if you really interested.

  DOn’t waste your money, you can atleast spend that for your needs.

 16. k magendiran says:

  I am exporter

 17. Ravindra mohan says:

  Hello sir. Good morning. We are like your program, it is good. so you continue work in your ways, we all in back to you.Thank You.

 18. manikandan.m says:

  ஐய வணக்கம் ,நான் திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்கிறேன் ,நான் சாதரான குடும்பத்தை சார்ந்தவன் ,பொருளாதார வசதி இல்லை ,என்னால் ஏற்றுமதி செய்ய முடியுமா ,குறைந்தது எவளவு முதலிடு தேவை விளக்கம் கொடுங்கள்

  • Y>Barook Batcha says:

   அய்யா நான் தஙகல் பயிர்சி வகுப்பில் கலந்து கொன்டு தர்ப்போது ஏட்ருமதி உரிமம் பெர முயர்சி செய்து கொன்டு இருகிரேன். பன்கில் நடப்புக்கனகு தொடஙுவது சிரமமாக உல்லது விவரம் கூரவும்.
   ஆர் சி நம்பர் மட்ரும் கம்பெனி நடத்திய சன்ட்ரு கெட்கிரார்கல்.

 19. SREXPORS&IMPORTS says:

  Sir iam Sridhar attend the program april/14/2013 in chennai.know igot theIE CODE sir.iam registered in apparellexpoort promotion council. I can arrange and export all kinds of textileproduct.Esspecialy organic cloths,bannanleaves product like shirt,pillo ,plate,cups mat,also.if you the any enquires please tell me sir Thank you have nice day.

 20. SREXPORS&IMPORTS says:

  Sir iam attend the program april/14/2013 in chennai.know igot theIE CODE sir.iam registered in apparellexpoort promotion council. I can arrange and export all kinds of textileproduct.Esspecialy organic cloths,bannanleaves product like shirt,pillo ,plate,cups mat,also.if you the any enquires please tell me sir Thank you have nice day.

 21. Noble raj. says:

  every tamilan watch and do it…….

 22. mahendiran.b says:

  I like to attend your seminor session. Please provide me the details like Fees,Seminor Date, Time & Place. It will be very continent for me, if the class is in Erode,Salem or Bangalore.

  Thanks.

 23. umanithya says:

  hello sir, my name is uma i am in pondicherry, i am watching your program regularly in makkal tv, i am very much interested in exporting because of your messages on september 8th my bother engagment program but iam not going to attend the function because your program is on september 8th in hotel mass so i am very much interested in attending the program thanking you i will meet you there sir.

 24. manogaran.N says:

  good

 25. syedyasin says:

  ponavaram NADANTHA ERODE CLASS MIKKA PAYANULLATHAKA ERUNTHATHU THANKYOU SIR

 26. tsrinivasan says:

  sir,we are want sales and agency,when we are attend the u r meeting class. we are want u r knowledge or business.so sent to my email.

 27. c.krishanamoorthi - erode says:

  sir vannakam.nan erodeill nadandha eattrumathi classill kalandhu konden.migavum payanullathagavum irruinthadu miga ealimaiyagavum irrunthadu,nandri.

 28. punniyamoorthi says:

  i am production for sugarcane juice.how i will export,pls reply.

 29. selvaraj says:

  Sir,
  vanakkam… i had attend your neengalum atrumathi seiyalam Erode class sir… very usful… now i am trying IE code sir… epoluthum ungaludaiya contact venum sir…thank you sir,

 30. muthuchezhian says:

  ayya vanakkam
  na maduraila vasikeran enaku ettrumathi patri eantha oru thagavalum theriyathu.na athai kathukeitu eattrumathi thozil panna verumburan. neangathan enaku valikkatalum.

 31. P.S.Jayanthi says:

  Sir,
  good evening, we are very much interested in export business, kindly inform us the next training program for the same venue and date.especially pondy classes.
  Thanks & Regards.

 32. sankarganesh says:

  sir next classas maduraila eappa nadaporinga inporm panunga sir

 33. sankarganesh says:

  sir nenga nathuna try training clase vandan rompa use ful iruku neng kuduth cd blanga iruku .sankar madurai

 34. g.Nancy says:

  Sir,

  good evening, i am very much interested in export business, kindly inform me the next training program for the same venue and date.

  Thanks & Regards.

 35. balu malaysia portklang says:

  வனக்கம்.௯பொர்ட்@இம்பொர்ட் ஆர்வ்ம் அநியாதுர்க்கு இருக்கு. பயம் அதை தான்டீஇருக்கு சார். என்னபன்னுவது…

 36. RAVI says:

  SIR
  Please inform Date of your next training
  Ravi

  • s.venkatesh says:

   Dear sir,

   I’m venkatesh degree holder from sathyamangalam. Sir i saw your E&I programme in makkat television. Here i want to know whether there will be your continuous support&guidence after completion of training programme .

 37. abu says:

  உஙகல் கரு

 38. M.Ammaiyappan says:

  Sir,
  I watched ‘Makkal TV’ and knew some ideas about agriculture and export and import business. You have told your Madurai program which will be on 10th March. But I did not note where should it will be in Madurai. I wish to attend that program and much more to know about it. I expect your reply.
  Thanking you,
  M. Ammaiyappan,
  February 2,2013.

 39. s.ramesh says:

  hi sir my name is ramesh. i have got export import license. iam working garment filed.i have interest export anything pls give some buyers.pls help me sir

 40. karunakaran says:

  Hi sir, I have got import and export license. I am an catering by profession. I am very much interested in exporting food items. Please help me to find quality buyer for food items.

  • RAKESH says:

   ஸிர்,
   ம்ய் நமெ இச் ரகெஷ்.
   நட்செட் ‘மக்கல் ட்வ்’ அன்ட் க்னெந் சொமெ இடெஅச் அபொஉட் அக்ரிசுல்டுரெ அன்ட் எ௯பொர்ட் அன்ட் இம்பொர்ட் புசினெச்ச்.
   ப்லெஅசெ கிவெ இம்பொர்ட் புசினெச்ச் டொ மலய்சிஅ
   இந்டிஅ
   தன்கிங் யொஉ,
   ற் . ரகெஷ் ஃப்ரொம் malaysia

 41. Suresh L says:

  Need forther details Import & Export.
  How to jain the seminor?
  Fees,Seminor Date, Time & Place.
  Pls give me the above detils.

  Thanks by
  Suresh L

அதிகம் படித்தது