சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐகோர்ட் உத்தரவு: மேலும் 4 வாரத்திற்கு உள்ளாட்சி தேர்தல் ரத்துOct 18, 2016

 

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ததற்கான உத்தரவை மேலும் 4 வாரத்திற்குத் தொடரும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

siragu-highcourt

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தி.மு.க சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்காக போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் நான்கு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது ஐகோர்ட்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐகோர்ட் உத்தரவு: மேலும் 4 வாரத்திற்கு உள்ளாட்சி தேர்தல் ரத்து”

அதிகம் படித்தது