மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐங்குறுநூறு 17

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 12, 2022

siragu aingurunuru

பாடல்கள் 11-20 வரை வேழம் பத்து என்ற தலைப்பில் அமைந்தது. வேழம் என்றால் நாணல்(Reeds) நாணலோடு பரத்தையரை இந்தப் பாடல்கள் ஒப்பிட்டு இயற்றப்பட்டுள்ளது.  இதனை ஓரம்போகியார் எழுதியுள்ளார்.  திணை மருதத் திணை. தலைவி தோழியிடம் சொல்வதாக அமைத்துள்ள பாடல்.

புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ

விசும்பு ஆடு குருகின் தன்றும் ஊரன்

புதுவோர் மேவலன் ஆகலின்

வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே”

என் கவிதை வடிவில்.

தலைவனவன்

பறந்தான் பரத்தையிடம்

தலைவியை மறந்தே

தலைவி தண்ணிழலாய்

குளிர் நிலவாய் ஆம்பலாய்

அழகையும் பண்பையும்

பொழிந்தாள் எனினும்

பரத்தையரை நாடி ஆண் உளமது

செல்லுதல் இயல்பே என்றே

தோழி கூறுகையில்

மெழுகென உருகிய

உளத்தோடு

வலி தோய்ந்த நெஞ்சமோடு

எழில் ஓதி

பறந்திடவே தலைவியும்

இயம்புகின்றாள்,

புதரில் ஆடிடும்

மணமற்ற நாணலின்

வெண்பூக்கள்

வானில் பறக்கும் குருகோவென

காட்சிப் பிழையாதல்

உண்டு

அந்தக் காட்சிப்பிழை

கொண்ட ஊரைச் சேர்ந்த

தலைவன் எண்ணமும்

பிழையானதால்

பரத்தையர் தாழ்வாரத்தில்

இன்பம் காணுகின்றான்

புதுப் புது நங்கையர்

வேண்டுகின்றான்

அவன் தந்திடும்

துன்பம் கூடிப்போனதாலே

என் மனமது

துவண்டே சுழல்கிறதே!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐங்குறுநூறு 17”

அதிகம் படித்தது