ஏப்ரல் 21, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

ஒவ்வொரு நொடியிலும் விழி! (கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

May 13, 2017

Siragu ovvoru nodiyilum

 

ஒவ்வொரு நாளும் பிற:
ஒளியால் நீ அதை நிறை!

நேரப் புதையல்கள் திற;
நேச நினைவுகள் நிறை!

பொக்கிசப் பொழுதுகள் அள;
பூமியில் புகழினை அடை!

இயன்ற உதவிகள் புரி;
இகத்தை இம்மியேனும் உயர்த்து!

மாற்றம்தான் வாழ்வென்றுணர்;
மாறாத ஊக்கத்தோடு உழை!

அளவிலா அன்பை நீ தெளி;
வாழ்வே அதற்கென்று தெளி!

ஆக்க முயற்சிகள் எடு;
ஐயங்கள் அனைத்தையும் களை!

நட்பு உறவினில் திளை;
நாளெல்லாம் ஆனந்தம் அடை!

எடுக்கும் அடியெல்லாம் உயர்;
எல்லாம் நன்மைக்கே உணர்!

ஒவ்வொரு நொடியிலும் விழி!
எழு.. நட.. ஓடு.. பற.. சிற!


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒவ்வொரு நொடியிலும் விழி! (கவிதை)”

அதிகம் படித்தது